ADDED : பிப் 19, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கேரம் பயிற்சி மையம் சார்பில், மாவட்ட அளவிலான மூன்றாவது போட்டி காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் சண்முகம் போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் ஓபன் பிரிவு ஆண்கள், பெண்கள் என, மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில், 250 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது என, காஞ்சிபுரம் மாவட்ட கேரம் பயிற்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

