/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட அளவிலான ஓவிய போட்டி காஞ்சி சங்கரா கல்லுாரி சிறப்பிடம்
/
மாவட்ட அளவிலான ஓவிய போட்டி காஞ்சி சங்கரா கல்லுாரி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான ஓவிய போட்டி காஞ்சி சங்கரா கல்லுாரி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான ஓவிய போட்டி காஞ்சி சங்கரா கல்லுாரி சிறப்பிடம்
ADDED : ஆக 18, 2025 12:50 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான 'இளம் நுகர்வோரின் விழிப்புணர்வு' ஓவிய போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த காஞ்சி சங்கரா கல்லுாரி மாணவியர் மூன்று பேரை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பாராட்டி பரிசு வழங்கினார்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், மாவட்ட அளவிலான 'இளம் நுகர்வோரின் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் ஓவிய போட்டி, கடந்த 2ம் தேதி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி யாமினி முதல் பரிசும், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவி தர்ஷினி இரண்டாம் பரிசும், பி.காம்., முதலாம் ஆண்டு மாணவி ரூபினி மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மூன்று மாணவியருக்கும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். சங்கரா கல்லுாரியில் நடந்த பாராட்டு விழாவில் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், துறை பேராசிரியர்கள் மூன்று மாண வியரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

