ADDED : பிப் 01, 2025 08:51 PM
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி நடந்து. இப்போட்டியில், எட்டு கல்லுாரிகளில் இருந்து மொத்தம் 16 மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லுாரியை சேர்ந்த மாணவி கே.ஆர்.தீபிகா, ‛நேரு கட்டமைத்த இந்தியா' இந்தியா என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றார்.
‛நேருவின் பஞ்சசீல கொள்கை' என்ற தலைப்பிலான பேச்சு போட்டியில் பங்கேற்ற கீழம்பி எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி மாணவி பா.வளர்மதி இரண்டாம் பரிசும், சோழன் கல்வியியல் கல்லுாரி மாணவி எம்.சாமுண்டீஸ்வரி மூன்றாம் பரிசையும் வென்றனர். பரிசு பெற்ற மாணவியரை அந்தந்த கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.