/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட மகளிர் கிரிக்கெட் ராணிப்பேட்டை அணி வெற்றி
/
மாவட்ட மகளிர் கிரிக்கெட் ராணிப்பேட்டை அணி வெற்றி
ADDED : ஜன 29, 2024 04:25 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி, தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்து வருகிறது.
இதில், திருவள்ளூரில் நடந்த போட்டியில், திருவள்ளூர் அணியுடன், ராணிப்பேட்டை அணி பலப்பரீட்சை நடத்தியது.
முதலில் களமிறங்கிய திருவள்ளூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யஷ்வந்திகா 34 ரன் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ராணிப்பேட்டை அணி வீராங்கனையர், எவ்வித பதற்றமும் இன்றி, பந்துகளை விரட்டி அடித்து ரன் குவித்தனர்.
இதனால், அந்த அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து, 145 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரீனாஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்தார்.
துாத்துக்குடியில் நடந்த மற்றொரு போட்டியில், கோவை அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வீழ்த்தியது.
கிருஷ்ணகிரியில் நடந்த போட்டியில், செங்கல்பட்டு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிருஷ்ணகிரி அணியை வென்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.