/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 8ம் தேதி மாவட்ட யோகா போட்டி
/
காஞ்சியில் வரும் 8ம் தேதி மாவட்ட யோகா போட்டி
ADDED : டிச 05, 2024 01:49 AM
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு பள்ளி விளையாட்டுகள் மற்றும் செயல்பாடு மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் காஞ்சிபுரம் சஹானா யோகா மையம் சார்பில், மாவட்ட அளவிலான யோகாசன போட்டி, வரும் 8ம் தேதி காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர், யோகா மையத்தில் பயில்வோர், தனிநபர் என, 6 வயது முதல் 56 வயதிற்கு உட்பட்டோர் என, 10 பிரிவுகளில் யோகாசன போட்டி நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுவோருக்கு கோப்பை வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கு, நாளை கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு 90923 34820 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.