/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வார்டு சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., கவுன்சிலர் பயனற்ற கூட்டம் என கமிஷனருக்கு கடிதம்
/
வார்டு சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., கவுன்சிலர் பயனற்ற கூட்டம் என கமிஷனருக்கு கடிதம்
வார்டு சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., கவுன்சிலர் பயனற்ற கூட்டம் என கமிஷனருக்கு கடிதம்
வார்டு சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., கவுன்சிலர் பயனற்ற கூட்டம் என கமிஷனருக்கு கடிதம்
ADDED : அக் 27, 2025 11:46 PM
காஞ்சிபுரம்: வார்டு சிறப்பு கூட்டம் நடத்த, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி, தி.மு.க., கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணிப்பதாக, கமிஷனருக்கு கடிதம் அளித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், மாநகராட்சிகளில் உள்ள வார்டு களில் தேவையான வளர்ச்சி பணிகள் பற்றி வார்டு வாரியான சிறப்பு கூட்டம் நடத்த, அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், சிறப்பு கூட்டம் நடத்த, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு, கமிஷனர் பாலசுப்ர மணியம் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்படி, நேற்று 26 வார்டுகளிலும், இன்று 25 வார்டுகளில் இந்த சிறப்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு கூட்டம் நடத்த கவுன்சிலர்கள் தயங்குகின்றனர். வார்டுகளில் கவுன்சிலர்கள் கேட்ட கோரிக்கை நிறைவேற்றாத காரணத்தால், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 34வது வார்டு தி.மு.க., - கவுன்சிலர் பிரவீன்குமார், வார்டு சிறப்பு கூட்டத்தில் இருந்து புறக்கணிப் பதாக தெரிவித்து, கமிஷனர் பாலசுப்ர மணியத்துக்கு கடிதம் கொடுத்து உள்ளார்.
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்த சிறப்பு கூட்டத்தில், மூன்று வகையான முக்கிய கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், அவற்றை தீர்மானமாக எழுதி அனுப்ப வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதுபோன்று, 2022ல் வார்டு வாரியாக கூட்டம் நடந்தது. அதிலும், இதுபோல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், நான் முன்வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
எந்த ஒரு ஆக்கப்பூர்வமான பணிகளும் என் வார்டுக்கு கிடைக்கும் வரை, வார்டு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பதையும், அதுபோன்ற பயனற்ற கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

