தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தி.மு.க., கொடிகம்பம் கட்டும்போது கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி: இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க., கொடிகம்பம் கட்டும்போது கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி: இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க., கொடிகம்பம் கட்டும்போது கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி: இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


UPDATED : ஜூன் 03, 2026 05:19 PM

ADDED : ஜூன் 03, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 05:19 PM ADDED : ஜூன் 03, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க., கொடிகம்பம் கட்டும்போது, உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் நேற்று உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியில் தி.மு.க.,வினர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக, கோளிவாக்கம் தி.மு.க., கட்சி அலுவலகம் அருகில் கொடிமர பீடத்தில் புதிதாக கொடிகம்பம் நடும் பணி நேற்று காலை நடைபெற்றது.

அப்போது, கொடிகம்பத்தை தூக்கி நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது கொடிகம்பம் உரசியதில், மின்சாரம் பாய்ந்தது.

இந்த விபத்தில், கொடிகம்பத்தை பிடித்துக் கொண்டிருந்த கோளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., உறுப்பினர் ராஜேந்திரன், 56, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.​மேலும், அருகில் இருந்த காளி மற்றும் குப்பன் ஆகிய இருவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தாலுகா போலீசார், ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us