/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் பெயர்ந்துள்ள மின் அலுவலகம் மழையில் நனைந்து வீணாகும் ஆவணங்கள்
/
கான்கிரீட் பெயர்ந்துள்ள மின் அலுவலகம் மழையில் நனைந்து வீணாகும் ஆவணங்கள்
கான்கிரீட் பெயர்ந்துள்ள மின் அலுவலகம் மழையில் நனைந்து வீணாகும் ஆவணங்கள்
கான்கிரீட் பெயர்ந்துள்ள மின் அலுவலகம் மழையில் நனைந்து வீணாகும் ஆவணங்கள்
ADDED : அக் 23, 2025 10:35 PM

ஓரிக்கை: காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின்நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவு கட்டடங்களில் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்கு ஒழுகும் நிலையில் சிதிலமடைந்து உள்ளதால், ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின்நிலைய அலுவலக வளாகத்தில், ஓரிக்கை, கலெக்ட்ரேட், செவிலிமேடு ஆகிய பகுதிகளுக்கான இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் மின் கட்டணம் வசூல் மையம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகங்களுக்கு மின் கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மின் மீட்டர் பழுது, மின் கணக்கீடில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இக்கட்டடங்கள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடம் என்பதால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இங்குள்ள அலுவலகங்களுக்கு பொதுமக்களும், மின் ஊழியர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும், அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள், ஆவணங்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது.
எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓரிக்கை துணை மின்நிலைய அலுவலக பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

