/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டான்பாஸ்கோ பள்ளி வாலிபாலில் முதலிடம்
/
டான்பாஸ்கோ பள்ளி வாலிபாலில் முதலிடம்
ADDED : டிச 05, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பள்ளிக்கல்வித் துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான 'பீச்' வாலிபால்போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 15 - 8, 15 - 17, 15 - 10 என்ற கணக்கில், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது.
செயின்ட் பீட்ஸ் பள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், செயின்ட் பீட்ஸ், 15 - 11, 15 - 7 என்ற கணக்கில், சோழிங்கநல்லுார் பாரதிதாசன் பள்ளியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.