/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உதயநிதி பிறந்த நாள் விழா படப்பையில் உதவிகள் வழங்கல்
/
உதயநிதி பிறந்த நாள் விழா படப்பையில் உதவிகள் வழங்கல்
உதயநிதி பிறந்த நாள் விழா படப்பையில் உதவிகள் வழங்கல்
உதயநிதி பிறந்த நாள் விழா படப்பையில் உதவிகள் வழங்கல்
ADDED : நவ 28, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை: தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி பிறந்த நாள் விழா, குன்றத்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அனைத்து கிளைகளிலும் தி.மு.க., கொடியேற்றி, இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடப்பட்டது.
படப்பை ஊராட்சியில் நேற்று நடந்த விழாவில், குன்றத்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பெண் ஒருவருக்கு தையல் மிஷின், 500 பேருக்கு பிரியாணி மற்றும் 500 மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.