sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

2.95 லட்சம் நெல் மூட்டைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2.95 கோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில் சந்தேகம்

/

2.95 லட்சம் நெல் மூட்டைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2.95 கோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில் சந்தேகம்

2.95 லட்சம் நெல் மூட்டைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2.95 கோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில் சந்தேகம்

2.95 லட்சம் நெல் மூட்டைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2.95 கோடி விவசாயிகளுக்கு கிடைப்பதில் சந்தேகம்


ADDED : மே 13, 2025 08:48 PM

Google News

ADDED : மே 13, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழு கட்டுப்பாட்டில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த, 29.50 லட்சம் நெல் மூட்டைகளுக்கு, 2.95 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, கணிசமான நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி, கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர்.

இதில், நவரை பருவத்திற்கு மட்டும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மாவட்டம் முழுதும் துவக்க அனுமதி அளிக்கின்றனர்.

நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.

அதன்படி, நுகர்பொருள் வாணிப கழத்தினர் கட்டுபாட்டில், 95 நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் கட்டுப்பாட்டில், 33 நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம், 128 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.

நேற்று முன்தினம் வரையில், நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 20 லட்சம் நெல் மூட்டைகள். தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் 9.50 லட்சம் நெல் மூட்டைகள் என, 29.50 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்துள்ளனர்.

இந்த நெல் மூட்டைகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் தலா 10 ரூபாய் வழங்குகின்றனர். அதன்படி, 2.95 கோடி ரூபாய் நெல் விற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இதை முறைகேடாக நெல் கொள்முதல் நிலையங்களை நடத்தும் அரசியல் கட்சியினர், அந்தந்த தொகுதி எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் என, சிண்டிகேட் போட்டு பங்கு போட்டு எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நெல் மூட்டைகளுக்குரிய பணம் கிடைப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:

ஒரு நெல் மூட்டைகள் விற்பனை செய்யும் போது, தலா ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் நெல் கொள்முதல் செய்து கொடுக்கிறோம். அரசு விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்கிறது.

அதை நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அதிகாரிகள் விவசாயிக்கு கொடுப்பதில்லை. மாறாக பங்கு போட்டுக் கொள்கின்றனர். இந்த ஆண்டு விற்ற நெல் மூட்டைக்கு ஏற்ப பணம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், 'இனி மேல் தான் கணக்கீடு செய்து, அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us