/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி
/
சாலை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி
சாலை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி
சாலை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி
ADDED : அக் 13, 2024 01:03 AM

மதுரமங்கலம்:பள்ளூர் - சோகண்டி இடையிலான சாலையை, விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி நீடிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழி சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு சாலை விரிவுபடுத்தும் பணிகள் துவங்கின.
இதில், காஞ்சிபுரம் உதவிக்கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகம் கட்டுப்பாட்டில், 12 கி.மீ., துாரம். ஸ்ரீபெரும்புதுார் உதவிக்கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகம் கட்டுப்பாட்டில் 11 கி.மீ., துாரம் என, இரு விதமாக பிரிக்கப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம் உதவிக்கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 12 கி.மீ., துாரம். ஸ்ரீபெரும்புதுார் உதவிக்கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 5 கி.மீ., துாரம் மட்டுமே, சாலை விரிவுபடுத்தப்பட்டு, 2022ல் நிறைவு பெற்று, வாகன பயன்பாட்டில் உள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால், கண்ணன்தாங்கல் கூட்டு சாலை முதல், மதுமரங்கலம், காந்துார், சோகண்டி வரையில், 7 கி.மீ., துார சாலை விரிவுபடுத்தும் பணி, இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளை நிலம் கையகப்படுத்துவதில் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில், பள்ளூர் - சோகண்டி இடையிலான சாலை விரிவுப்படுத்துவதற்கு, சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில், நிலம் எடுக்க அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரமங்கலம் வருவாய் கணக்கில், 12,948 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலம் கையகப்படுத்துவதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்ட அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என, தெரிவித்து உள்ளனர்.
இந்த, 7 கி.மீ., துார சாலை விரிவுபடுத்தினால், கண்ணன்தாங்கல் பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலைக்கு வாகன வசதி மற்றும் கண்ணன்தாங்கல், மதுரமங்கலம், காந்துார், சோகண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மக்களின் வாகன பயன்பாட்டிற்கு சவுகரியமாக இருக்கும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 7 கி.மீ., துார சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நில எடுப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அதன் பின், சாலை போடும் திட்டம் தயாரித்து, சாலை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்படும். இதன் வாயிலாக, கண்ணன்தாங்கல் பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் வாகனங்கள் சென்று வர சவுகரியமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.