/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
வடிகால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால்வாயில் அடைப்பு: கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஜூலை 21, 2025 01:42 AM

வாலாஜாபாத்:புத்தகரம் கிராமத்தில், மழைநீர் வடிகால்வாய் அடைப்பால் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், பெருமாள் கோவில் தெருவின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயில் வீடுகளின் கழிவுநீர் வெளியேற்றுவதை அப்பகுதியினர் வழக்கத்தில் கொண்டுள்ளனர். இந்நிலையில், இக்கால்வாய் போதுமான பராமரிப்பின்மையால் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு, துர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடு உள்ளதால் கால்வாய் அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.