ADDED : நவ 30, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஜெம் நகர் அருகில், வடிகால்வாய் வாயிலாக, மழைநீர் வெளியேறும் இடத்தில் ஓட்டையில் மண் துகள்களால் அடைப்பு ஏற்பட்டது.
இதனால், மழைநீர் கால்வாய் வாயிலாக வெளியேற வழியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் தேங்கிய மழைநீரால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வந்தனர்.
மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் ஓட்டையில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறையினர், மழைநீர் வடிகால்வாய் ஓட்டையில் ஏற்பட்டு இருந்த அடைப்பை நேற்று நீக்கினர்.