/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடி, கொடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
செடி, கொடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடி, கொடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடி, கொடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : நவ 02, 2025 01:00 AM

கோளிவாக்கம்: கோளிவாக்கத்தில், செடி, கொடிகள் வளர்ந்து, வடிகால்வாய் துார்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சியில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இவ்வூரில் பிரதான தெருவில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதாலும், துார்ந்த நிலையில் உள்ளதால், மழைநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, மழைநீர் தேங்காதவாறு வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோளிவாக்கம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.