/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 01, 2025 02:04 AM

அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் கிராமத்தில், செடிகள் வளர்ந்து துார்ந்த வடிகால்வாயை துார்வாரி சீரமைக்காததால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி பிரதான சாலை மற்றும் சுற்றியுளள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால் கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க அய்யங்கார்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.