செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : டிச 15, 2025 05:37 AM

அ நிறம் | அளவு
புஞ்சையரசந்தாங்கல்: புஞ்சையரசந்தாங்கலில் செடிகளால் துார்ந்த வடிகால்வாயால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம் புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேற முடியாத சூழல் உள்ளது.
எனவே, வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
