மண் திட்டுகளால் துார்ந்த வடிகால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
மண் திட்டுகளால் துார்ந்த வடிகால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஆக 13, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், மண் திட்டுகளாலும், குப்பையாலும் துார்ந்துள்ள வடிகாலால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 28வது வார்டு கோகுலம் வீதியில், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், குப்பையாலும் வடிகால் துார்ந்துள்ளது.
பலத்த மழை பெய்தால், வடிகால் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள், காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், துார்ந்துள்ள வடிகாலை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
