UPDATED : ஆக 29, 2026 09:27 PM
ADDED : ஆக 29, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர்:மாகறல் பகுதியில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்லும் குடிநீரை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, வெங்கச்சேரி செய்யாற்றங்கரையில் இருந்து ஆழ்துளை குழாய் அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெங்கச்சேரியிலிருந்து நிலத்தடியில் புதைக்கப்பட குழாயில், மாகரல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையோரம் வழிந்தோடுகிறது.
இதனால், கிராமங்களுக்கு குடிநீர் முழுமையாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, மாகறல் பகுதியில், உடைந்துள்ள குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்./
