/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் மாற்றி பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
/
மின் மாற்றி பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
ADDED : ஜன 30, 2024 06:11 AM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 12வது வார்டு, வீராசாமி பிள்ளை கோவில் தெருவில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பள்ளி அருகில் ஆழ்துளை கிணறு மற்றும் மினி மோட்டார், சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு முன் மோட்டார் பழுதடைந்ததால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாமல், தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் பழுதான மோட்டாரை சரி செய்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.