/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் தொட்டி
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் குடிநீர் தொட்டி
ADDED : ஜன 17, 2024 09:52 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது குண்ணவாக்கம் கிராமம். இக்கிராமத்தில், கோடைகாலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகிக்க ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.
அதன்படி, 2020- - 21ல், கனிமவள நிதியின் கீழ், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கப்பட்டது.
பணி முடிந்து ஓராண்டாகியும், இதுவரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி வினியோகிக்காமல் வீணாகி வருகிறது.
தற்போது, பருவமழை காலம் முடிந்துள்ள நிலையில், விரைவில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதற்கு முன் இப்பகுதியில் புதியதாக கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.