/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
ADDED : நவ 03, 2025 10:50 PM

உத்திரமேரூர்: சிலாம்பாக்கத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சிலாம்பாக்கம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும் குடிநீரை, பூமியில் புதைக்கப்பட்ட குழாய்களின் மூலமாக, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருவேப்பம்பூண்டி சாலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று, முறையாக பராமரிப்பு இல்லாமல் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக, உடைப்பு ஏற்பட்ட குழாய் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால், சிலாம்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரானது அங்கேயே தேங்குவதால், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சிலாம்பாக்கத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின், பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

