/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : ஏப் 09, 2025 01:19 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் கிராமத்தில் இருந்து, மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்த சாலையோரத்தில் காவாம்பயிர் செய்யாற்றில் இருந்து, மலையாங்குளம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் பைப்லைன் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் குடிநீரானது, சாலையிலே தேங்கி வருகிறது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், சாலையில் தேங்கும் நீரிலிருந்து தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உடைந்த பைப்லைனை விரைந்து சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.