/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்ட ஓட்டுநர், நடத்துநர்
/
போதை பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்ட ஓட்டுநர், நடத்துநர்
போதை பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்ட ஓட்டுநர், நடத்துநர்
போதை பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்ட ஓட்டுநர், நடத்துநர்
ADDED : ஜன 04, 2026 05:46 AM

கூடுவாஞ்சேரி: மது போதையில், அரசு பேருந்தில் பயணித்த நபரை, வலுக்கட்டாயமாக நடத்துநர் கீழே தள்ளி விட்ட சம்பவத்தை மக்கள் தட்டிக் கேட்டதால், கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், திருச்சிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
அந்த பேருந்தில், 40க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். அதில், மது போதையில் இருந்த நபர், விழுப்புரம் செல்ல பயண சீட்டு தரும்படி, நடத்துநரிடம் கேட்டு உள்ளார்.
அவர் மது போதையில் இருப்பதால் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என கூறி, அந்த நபரை, கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி அருகே, நடத்துநர் கீழே இறங்கும்படி கூறி உள்ளார். அந்த நபர் இறங்க மறுத்ததால், ஒட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து, வலுக்கட்டாயமாக அந்த நபரை கீழே தள்ளி உள்ளனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கண்டனம் தெரிவித்து, பேருந்தை முற்றுகையிட்டு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பின், போலீசார், பொது மக்கள் இணைந்து, அந்த நபரை பேருந்தில் ஏற்றி விட முயற்சித்தனர். ஓட்டுநரும், நடத்துநரும் சம்மதிக்காததால், அந்த நபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

