/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எரியாத மின் விளக்கு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
எரியாத மின் விளக்கு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூன் 15, 2025 01:42 AM

சிங்கபெருமாள் கோவில்,:ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர்.
செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது. இங்கு சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
மேலும் ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 138.27 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று பாலத்தின்
ஒரு பக்கம் ஒரகடம் மார்க்கம் கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மார்க்கம் பணிகள் முடிந்து திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
ஒரகடம் மார்க்கத்தில் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள மின் விளக்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் எரியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
மேலும் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மேம்பாலத்தில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.