ADDED : பிப் 06, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், கே.என்.கே.-டி.வி.எஸ்., சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.
விழாவில் தனியார் கார், வேன், சுற்றுலா பேருந்து, ஆட்டோ ஓட்டுனர்கள், தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மருந்து வணிகர்களின் சங்கம் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் முன்னேற்ற சங்கத்தினர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் வட்டாரமோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், சாலை பாதுகாப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

