ADDED : ஆக 26, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர், ஆக. 27–
மதுபோதையில் பிரபாகரன், 52, வீட்டு மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்திரமேரூர் அடுத்த, காவனிப்பாக்கம் கிராமம், களத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 52. தச்சர். இவர், மது பழக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் இருந்த போது வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
