/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கோவில் கோபுரம் மீது ஏறி 'போதை' ஆசாமி அட்டகாசம்
/
காஞ்சியில் கோவில் கோபுரம் மீது ஏறி 'போதை' ஆசாமி அட்டகாசம்
காஞ்சியில் கோவில் கோபுரம் மீது ஏறி 'போதை' ஆசாமி அட்டகாசம்
காஞ்சியில் கோவில் கோபுரம் மீது ஏறி 'போதை' ஆசாமி அட்டகாசம்
ADDED : நவ 09, 2024 10:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கோவில் கோபுரத்தின் மீது ஏறி 'போதை' ஆசாமி அட்டகாசம் செய்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலின் ராஜகோபுரத்தில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சவுக்கு கட்டையில், கோபுரத்தின் இரண்டாம் நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஆண் ஒருவர் அமர்ந்திருப்பது அப்பகுதிவாசிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நேரில் வந்து பார்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோபுரத்தின் சவுக்கு கட்டையில் அமர்ந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேரில் வந்துள்ளனர். கோபுரத்தின் மேல் ஏறிச் சென்ற அவர்கள், அந்த நபரை கீழே இறக்கி கூட்டி வந்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், மது போதையில் அந்த நபர் கோவில் கோபுரத்தின் மீது ஏறியதும், மேல் ஒட்டிவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 45. என்பதும் தெரியவந்துள்ளது.
கோபுரம் மீது ஏறிய வெங்கடேசனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.