/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு
/
உத்திரமேரூரில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு
ADDED : டிச 23, 2025 01:38 AM
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் காவல் கோட்டம் புதிதாக உருவானதை தொடர்ந்து, டி.எஸ்.பி., அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் என இரு காவல் கோட்டங் களின் கீழ், 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெருநகர், சாலவாக்கம், உத்திரமேரூர், மாகரல், வாலாஜாபாத் ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்த்து, புதிதாக உத்திரமேரூர் காவல் கோட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
சமீபத்தில் உத்திரமேரூர் கோட்டம் உருவாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், சாலவாக்கம், மாகரல், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன.
உத்திரமேரூரில், புதிய டி.எஸ்.பி., அலுவலகத்தை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர், உத்திரமேரூர் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

