/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் உயரமாக அமைத்ததால் சாலையில் தேங்கும் மழைநீர்
/
கால்வாய் உயரமாக அமைத்ததால் சாலையில் தேங்கும் மழைநீர்
கால்வாய் உயரமாக அமைத்ததால் சாலையில் தேங்கும் மழைநீர்
கால்வாய் உயரமாக அமைத்ததால் சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : ஜன 11, 2024 12:52 AM

குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சி, சிவ - விஷ்ணு நகரில் சாலையைவிட உயரமாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
குன்றத்துார் நகராட்சி, சிவ - விஷ்ணு நகரில், ரங்கநாதன் தெரு, மாணிக்கம் தெரு,கன்னியப்பன் தெருவில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அண்மையில் அமைக்கப்பட்டது.
இந்த வடிகால்வாய்கள் சாலையைவிட உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
மழைநீர் வடிய அமைக்கப்பட்ட கால்வாயால், நீர் வெளியேற வழி இல்லை. இதனால், மழை காலத்தில் தண்ணீர தேங்கி நிற்பதால் சாலையில் செல்லாமல் கால்வாய் மீது நடந்து செல்கிறோம்.
எதற்காக இதுபோல, உயரமான கால்வாய் அமைத்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே, தெருக்களில் தேங்கும் மழைநீர் வெளியேற முறையான வடிகால்வாய் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.