sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பணைகள் இல்லாததால் கடலில் கலக்கும் 20,500 கன அடி நீர் ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீண்

/

தடுப்பணைகள் இல்லாததால் கடலில் கலக்கும் 20,500 கன அடி நீர் ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீண்

தடுப்பணைகள் இல்லாததால் கடலில் கலக்கும் 20,500 கன அடி நீர் ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீண்

தடுப்பணைகள் இல்லாததால் கடலில் கலக்கும் 20,500 கன அடி நீர் ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீண்


ADDED : அக் 23, 2025 10:47 PM

Google News

ADDED : அக் 23, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பாலாற்றின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லாததால், வினாடிக்கு 20,500 கன அடி நீர் என, ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்கள் பிரிப்பதற்கு முன்பாக, பாலாற்றில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என, முன்னாள் முதல்வர் பழனிசாமி, 2017ல் அறிவித்தார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஈசூர், வாயலுார் ஆகிய இரு இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரத்திலும் என, பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டன.

இதையடுத்து, 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, 4 ஆண்டுகளான நிலையில், பாலாற்றில் தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலாற்றிலிருந்து கரைபுரண்டு ஓடும் நீர், கல்பாக்கம் அருகே கடலில் வீணாக கலக்கிறது.

நீர்வளத்துறை அரசு அனுப்பிய திட்ட அறிக்கை படி, பாலுார், வெங்குடி, உதயம்பாக்கம், விஷார் என இன்னும் நான்கு இடங்களில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

ஆனால், நான்கு தடுப்பணைகள் இதுவரை கட்டப்படாததால், தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வேகவதி, செய்யாறு ஆகிய ஆறுகளில் வரும் தண்ணீர், வெவ்வேறு இடங்களில் பாலாற்றில் கலந்து கடலில் கலக்கிறது. அவ்வாறு, ஆறுகளிலும் வரும் தண்ணீர் கலந்து பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாயலுார் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

நீர்வளத்துறை கணக் கெடுப்பின்படி, பாலாற்றில் 10,000 கன அடி நீரும், செய்யாற்றில் 10,500 கன அடி நீரும் செல்கிறது. இரண்டு ஆறுகளும் பழையசீவரம் அருகே கலந்து, வினாடிக்கு, 20,500 கன அடி நீர் கடலை நோக்கி செல்கிறது.

அதாவது, ஒரு நாளைக்கு, 1.7 டி.எம்.சி., தண்ணீர் தடுப்பணையில் இருந்து வெளியேறி, கடலில் கலந்து வீணாகிறது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியிருந்தால், விவசாயத்திற்கு மடைமாற்றி பயன்படுத்தி இருக்கலாம்; தண்ணீரை மேலும் நான்கு இடங்களில் தேக்கி வைத்திருக்க முடியும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us