/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று குப்பை கழிவு அகற்றி துாய்மை பணி
/
பாலாற்று குப்பை கழிவு அகற்றி துாய்மை பணி
ADDED : பிப் 16, 2025 02:48 AM

திருமுக்கூடல், :பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் திருமுக்கூடல் கிராமம் உள்ளது.
இப்பகுதி பாலாற்றங்கரையொட்டி, பிரசித்தம் பெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று பார்வேட்டை விழா நடைபெறும்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்கு வருவது வழக்கம்.
அவ்விழாவின் போது, பக்தர்கள் மூலமாகவும், கடைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள், பாலாற்று படுகையில் குவிந்து சுகாதரமற்ற முறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் திரிவேணி அகடாமி பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து, திருமுக்கூடல் பாலாற்றில் குப்பை கழிவுகள் அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதன் மூலம் பாலாற்று பகுதியில் 510 கிலோ நெகிழிப் பைகளை சேகரித்து திருமுக்கூடல் ஊராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

