/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொற்பந்தல் ஏரியை துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
/
பொற்பந்தல் ஏரியை துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 28, 2025 11:55 PM

உத்திரமேரூர், பொற்பந்தல் ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஏரி தண்ணீரை பயன் படுத்தி, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இந்த ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில், செடிகள், கோரை புற்கள் வளர்ந்து மண்ணால் துார்ந்து உள்ளன.
இதனால், மழை நேரங்களில் போதுமான அளவு நீர் சேக ரமாகாமல், உபரிநீர் விரைவாக வெளி யேறும் சூழல் உள்ளது. ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரிக்க முடியாததால், விவசாயத்திற்கு ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யும் நிலை உள்ளது.
எனவே, பொற்பந்தல் ஏரியை துார்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.