/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ - சேவை மையம்
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ - சேவை மையம்
ADDED : பிப் 02, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் உள்ள 234 எம்.எல்.ஏ., அலுவலகங்களிலும், மின் ஆளுமை முகமை வாயிலாக, அரசு இ - சேவை மையம் துவக்கப்படும் என, ஓராண்டுக்கு முன், தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் அலுவலகம், கால்நடை மருத்துவமனை அருகே இயங்கி வருகிறது. இந்த இடத்தில், அரசு இ - சேவை மைய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணினி அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை போன்றவை இந்த நிதியில் அமைக்கப்பட உள்ளன.

