/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 15, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், வடக்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், மின் கணக்கீட்டில் குறைபாடு, மின் இணைப்பு பெயர் மாற்றம், விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட ஐந்து மனுக்கள் வரப்பெற்றன.
காஞ்சிபுரம் வடக்கு கோட்ட பொறுப்பு செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஹரிதாஸ், ஏழுமலை மற்றும் இளநிலை உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.