/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவர்களுக்கான இ.சி.ஜி., பயிற்சி
/
மருத்துவர்களுக்கான இ.சி.ஜி., பயிற்சி
ADDED : பிப் 10, 2026 05:22 AM

காஞ்சிபுரம்: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கான இ.சி.ஜி., பயிற்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் தண்யகுமார், செயலர் முத்துகுமரன், பொருளாளர் ஞானவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பயிற்சியை துவக்கி வைத்தனர்.
இதில், இ.சி.ஜி., எவ்வாறு எடுப்பது மற்றும் அதில் இருந்து இதய நோய்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பேராசிரியர் அஜித் பிள்ளையும், திடீரென மயக்கமடையும் நபரை எவ்வாறு சி.பி.ஆர்., எனும் முதலுதவி செய்து காப்பாற்றுவது என, மருத்துவர் ஸ்டாலின் ராய் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
இதயத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து மருத்துவர், அருண்குமாரும், இதய நோயால் ஏற்படும் திடீர் மரணம் குறித்து மருத்துவர் பரத்குமாரும் விளக்கினர்.
இதில், பங்கேற்ற மருத்துவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

