/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் டிச., 6ல் வெள்ளோட்டம்
/
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் டிச., 6ல் வெள்ளோட்டம்
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் டிச., 6ல் வெள்ளோட்டம்
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் டிச., 6ல் வெள்ளோட்டம்
ADDED : நவ 14, 2025 10:44 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், டிச., 6ம் தேதி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், டிச., 8ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, 29 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக தங்கத்தேர் செய்யும் பணி, 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையறிந்த, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானைப்படி, தேர் செய்யும் பணிக்காக ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்பார்வையில், புதிய தங்கத்தேர் செய்யும் பணி, இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில், மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில் நடந்து வருகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட சிற்பிகள், புதிய தங்கத்தேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் குமரதுரை, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி அய்யர் ஆகியோரது ஒத்துழைப்புடன் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் புதிய தங்கத்தேரை நிறுத்துவதற்காக, 18 லட்சம் ரூபாய் செலவில், தேர் மண்டபம் கட்டுமானப் பணி முடிந்து தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது.
தங்கத்தேரின் உயரம் 23 அடி, நீளம் 15 அடி, அகலம் 13 அடி, மொத்தம் 23 கிலோ தங்கத்தில் தேர் உருவாக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
வரும் டிச., 6ம் தேதி புதிய தங்கத்தேர் வெள்ளோட்டமும், தங்க ரதத்தை கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கும் விழா, ஓரிக்கை மணி மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

