ADDED : நவ 28, 2024 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்,:வாலாஜாபாத், சேர்க்காடு பகுதி, சாலையோரத்தில், மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடைப்பதை கண்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், மூதாட்டியை மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் மேவை வாகனம் வாயிலாக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார் என்பது குறித்து விசாரித்தனர்.
விசாரணையில், மூதாட்டியின் பெயர் நாகம்மாள், 70, என்பதும், அவர் ஆதரவற்றவர் என்பதும் தெரியவந்தது.
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து, அப்பகுதி வி.ஏ.ஒ., சுரேஷ் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.