/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி கிராமங்களில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

ADDED : மார் 20, 2024 09:58 PM

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேசிய நெடுஞ்சாலை
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்களை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும், காஞ்சிபுரம் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கலெக்டர், கலைச்செல்வி நகர்ப்புற மற்றும் உள்ளாட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவின்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலையோர தடுப்புச்சுவரில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்களை ஊராட்சி ஊழியர்கள் அழித்தனர்.
கொடி கம்பங்கள்
பயணியர் நிழற்குடையில் எழுதப்பட்ட காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் பெயரை துணியால் மூடி மறைத்தனர்.
இதேபோல, ஆற்பாக்கம் ஊராட்சியில், சுவர் விளம்பரம் அழித்ததோடு, கட்சி கொடி கம்பங்களை அகற்றினர்.
மேலும், மின்கம்பங்களில் வரையப்பட்டிருந்த கட்சி நிற வர்ணத்தையும் ஊராட்சி ஊழியர்கள் அழித்தனர்.