/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதரில் மறைந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
புதரில் மறைந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 19, 2024 02:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த சாலமங்கலத்தில் இருந்து மாகாணியம் செல்லும் பிரதான சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கிறது.
இந்த நிலையில், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து, மின் கம்பத்தை சூழ்ந்து உள்ளது. மின் ஒயர் ஒன்றோடு ஒன்று இணைந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்து உள்ளதால், மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, புதிய மின் கம்பத்தை மாற்றி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.