/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்பத்தில் திறந்த நிலையில் மின் பியூஸ் கேரியர்
/
கம்பத்தில் திறந்த நிலையில் மின் பியூஸ் கேரியர்
ADDED : அக் 01, 2024 04:03 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், நெல்வாய் துணை கிராமம் உள்ளது. இங்கு, பஜனை கோவில் தெரு மற்றும் பார்வதியம்மன் கோவில் தெரு இணைக்கும் சாலையோரம், 5.26 லட்ச ரூபாய் செலவில், மழைநீர் கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய் கட்டுமான பணியால், வீடுகள் தாழ்வாகவும், மழைநீர் கால்வாய் உயரமாகவும் மாறி உள்ளது.
இதுதவிர, மழைநீர் வடிகால்வாய் கட்டும் போது, சாலையோர மின் கம்பங்களை அகற்றவில்லை. மாறாக, கான்கிரீட் சிமென்ட் சுவருடன் மின்கம்பத்தை சேர்த்து கட்டி முடித்துள்ளனர்.
இதனால், மழைநீர் கால்வாய் மீது நின்றால், கைக்கு எட்டும் துாரத்தில் மின் கம்பத்தின் பியூஸ் கேரியர் உள்ளது. இது, ஆபத்தான முறையில்உள்ளது.
இந்த பியூஸ் கேரியரால், மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ஆபத்தாக இருக்கும் மின் பியூஸ் கேரியரை பாதுகாப்பு பெட்டியில் வைத்து பூட்டு போட வேண்டும் என, நெல்வாய் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.