மின்சார பாதுகாப்பு வாரம் பாதுகாப்பு வழிமுறை வெளியிடு
மின்சார பாதுகாப்பு வாரம் பாதுகாப்பு வழிமுறை வெளியிடு
ADDED : ஜூன் 29, 2026 10:54 PM
சென்னை: மின்சார பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் மின் ஆய்வாளர் சார்பில், பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டன.
மின் ஆய்வுத் துறை, பொது மக்களுக்கு மின்சார பாதுகாப்பு தொடர்பான பணிகளை செய்து வருகிறது. 'தேசிய மின்சார பாதுகாப்பு நாள்' ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை, 'தேசிய மின்சார பாதுகாப்பு வாரம்' ஆக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் நிகழ்வின் நோக்கமாகும்.
இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மின் ஆய்வாளர் சார்பில் தகவல் அடங்கிய செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், பொதுமக்கள், மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் வாயிலாக செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங் சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்ற வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 20 மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
