/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2 அடி உயர்த்தி சாலை அமைப்பு பள்ளத்தில் மண் அணைக்க வலியுறுத்தல்
/
2 அடி உயர்த்தி சாலை அமைப்பு பள்ளத்தில் மண் அணைக்க வலியுறுத்தல்
2 அடி உயர்த்தி சாலை அமைப்பு பள்ளத்தில் மண் அணைக்க வலியுறுத்தல்
2 அடி உயர்த்தி சாலை அமைப்பு பள்ளத்தில் மண் அணைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 11:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சி, பாலாஜி நகரில் இருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் ஓட்டியுள்ள சர்வீஸ் சாலை இணையும் இடத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைத்த சாலை, தரை மட்டத்தைவிட இரண்டு அடி உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளததால், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், திம்மசமுத்திரம் கிராமத்தில் இருந்து வெள்ளைகேட் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் செல்ல, சாலை வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகளும், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, திம்மசமுத்திரம் பாலாஜி நகர் - வெள்ளைகேட் மேம்பாலம் சர்வீஸ் சாலையுடன், இணையும் இடத்தில் புதிதாக அமைத்துள்ள சாலையோரம் உள்ள பள்ளத்திற்கு மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திம்மசமுத்திரம் ஊராட்சியில், சாலையோரம் உள்ள பள்ளத்திற்கு மண் அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.