/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டா வழங்க கீழாண்டை பகுதிவாசிகள் வலியுறுத்தல்
/
பட்டா வழங்க கீழாண்டை பகுதிவாசிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 05:53 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில், கீழாண்டை தெரு உள்ளது. இக்குடியிருப்பு பகுதியில் 22 குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் வீடு கட்டி வசிக்கின்றனர்.
இப்பகுதிவாசிகள், வீடுகள் கட்டி உள்ள நிலம் புறம்போக்கு நிலம் எனவும், இதுநாள் வரை பட்டா வழங்காததால், பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருவதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் கீழாண்டை தெரு வாசிகள் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்பு பகுதி, பட்டா வழங்கஇயலாத புறம்போக்கு வகை என கூறப்படுகிறது.
பட்டா வேண்டி கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் இதுரை நடவடிக்கை இல்லை. இதனால், அரசு சார்ந்த பல்வேறு சலுகைகள் பெற இயலாமல் தவித்து வருகிறோம். எனவே, இந்த புறம்போக்கு நில பகுதியை வகை மாற்றம் செய்து நிபந்தனைக்குட்பட்ட வரன்முறை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.