/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 02:51 AM

சிறுகாவேரிபாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய், பச்சையம்மன் கோவில் எதிரில் உள்ள சாலை வழியாக செல்கிறது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் கோரைப்புல், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

