ADDED : நவ 15, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்த பினப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 24. இவர், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று காலை தொழிற்சாலையில் உள்ள மின்மாற்றியில் மின் ஒயர் பொருத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
சக ஊழியர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஹரி பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.