ADDED : டிச 21, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பினாயூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன், 43. தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 10ல் செங்கல்பட்டில் இருந்து, பினாயூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அரும்புலியூர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே, சென்றப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் இறந்தார்.
சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.