ADDED : மே 18, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஊராட்சியில் தாங்கல் என அழைக்கப்படும் சிற்றேரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி கலங்கல் வழியாக செல்லும் உபரி நீர் வையாவூர் ஏரியை சென்றடைகிறது.
ஏனாத்துார் ஆதிசங்கரர் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்று வரும் பிரதான தரைப்பாலமாக உள்ளது.
இந்த பாலம் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு இன்றி உள்ளன. இதனால், அந்த தரைப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.