/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
/
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
ADDED : மார் 24, 2025 02:09 AM
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியை பயன்படுத்தி, அப்பகுதியில் 400 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
இதில், ஒன்றாம் எண் மதகில் இருந்து துவங்கும் பாசன கால்வாய் வழியே, அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ந்தது. இந்நிலையில், இந்த கால்வாய், ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சோமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:
சோமங்கலம் ஏரி நீரை பயன்படுத்தி, ஆண்டிற்கு இரண்டு போகம் விவசாயம் செய்கிறோம். ஒன்றாம் எண் மதகில் இருந்து துவங்கும் கால்வாய், 20 அடி அகலத்தில், 700 மீட்டர் நீளத்திற்கு இருந்தது. இந்த வழியே, விவசாய நிலத்திற்கு தாராளமாய் தண்ணீர் பய்ந்தது.
கடந்த 15 ஆண்டுகளாக, இந்த கால்வாய் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால், தற்போது 5 அடி அகலத்திற்கு மட்டுமே கால்வாய் உள்ளது.
மேலும், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாயில் நேரடியாக கலக்கிறது.
இதனால், இந்த கால்வாயை வழியே தண்ணீர் பாய்ச்ச முடியாததால், 25 ஏக்கர் விவசாய நிலம் பாழாகி, சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது.
தற்போது விவசாயம் செய்வோர், இரண்டாம் எண் மதகு வழியே, அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு வரும் தண்ணீரை, அவர்கள் தேவை முடிந்த பின், போராடி பெற வேண்டியுள்ளது.
இதே நிலை நீடித்தால், ஒன்றாம் எண் மதகு வழியே பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
கலெக்டர் இதில் தலையிட்டு, பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை துார் வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.