/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் வினியோக வளாகத்தில் நுழைய தடை
/
குடிநீர் வினியோக வளாகத்தில் நுழைய தடை
ADDED : நவ 20, 2024 12:51 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் 40,000 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், வெங்கச்சேரி செய்யாறு படுகை, உத்திரமேரூர் ஏரி ஆகிய இடங்களிலிருந்து, ராட்சத பைப்லைன் வாயிலாக கொண்டு வரப்படுகிறது. பின், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி, நரசிம்ம நகரில் அமைந்துள்ள குடிநீர் வினியோகம் வளாகத்தில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இங்கு,வெளியாட்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, மது அருந்துவது, குடிநீர் குழாயை திறப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே, இதை தடுக்கும் விதமாக, வெளியாட்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டுள்ளது என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

